search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்படுத்தும் பணிகள்"

    திருப்பூர் நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 110-ன் கீழ் நொய்யல் ஆற்றை மாசு படாமல் சீரமைக்கும் திட்டத்தினை அறிவித்தார்கள். அதில் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமா நதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று மேற்கு கிழக்காக கோவை, திருப்பூர் , ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

    மேலும், திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசு அடைவதை தவிர்க்கும் பொருட்டு ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைத்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச்சுவரின் வெளியப்புறத்தில் கழிவு நீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல்,

    நடைபாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்தல் ஆகிய பணிகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் பிற திட்டங்கள் குறித்து திருப்பூர் பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள், திருப்பூர் தொழில் துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்பத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு இப்பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், சுற்றுச்சூழல் இணை தலைமைபொறியாளர் கோகுலதாஸ், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர்கள் திரு. செந்தில் விநாயகம் (திருப்பூர் வடக்கு),

    சண்முகம் (திருப்பூர் தெற்கு ), மதிவாணன் (பறக்கும் படை), உதவி பொறியாளர்கள், திருப்பூர் மாநகராட்சி செயற் பொறியாளர் திருமுருகன், பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள், திருப்பூர் தொழில் துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×